இந்தியன் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்சாய்ராஜ் & சிராக் ஷெட்டி ஜோடி விலகல்?? ஓ இது தான் காரணமா??

0
இந்தியன் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்சாய்ராஜ் & சிராக் ஷெட்டி ஜோடி விலகல்?? ஓ இது தான் காரணமா??
இந்தியன் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்சாய்ராஜ் & சிராக் ஷெட்டி ஜோடி விலகல்?? ஓ இது தான் காரணமா??

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேட்மிண்டன்:

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீரர்களான, சிந்து, H S பிரணாய், லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், சிந்து, H S பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார். இவர்களில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி மற்றும் மேத்யூ கிரிம்லி ஜோடியை 21-13, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

காமெடியை கழட்டிவிட்டு ஹீரோவாக ஆட்டத்தை தொடங்கும் சதீஷ்,, இவரின் next படம் குறித்து வெளியான தகவல்!!!!

இவர்கள் அடுத்த சுற்றில் இன்று, சீன வீரர்களை எதிர்கொள்ள இருந்தனர். ஆனால், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் இந்த ஜோடி உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், சமீபத்தில் முடிந்த மலேசிய ஓபன் தொடரில், அரையிறுதி வரை முன்னேறி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here