
மாதந்தோறும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கு, வீட்டு பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் ரூ. 200 குறைக்கப்பட்டு ரூ.918.50க்கும், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் ரூ.157.50 குறைந்து ரூ.1,695-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பானது பயனாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இதன் தொடர்ச்சியாக மேலும் 3 அறிவிப்புகளை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது,
- 5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய அயர்ன் பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
- கேஸ் சிலிண்டரின் 2 வகை பயன்பாட்டிற்கும் ஒரே மாதிரியான ரெகுலேட்டரும், ரப்பர் குழாயும் பயன்படுத்தப்படுகிறது. இதில், அதிக எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கு தரமான ரெகுலேட்டரும், ரப்பர் குழாயும் தயார் செய்ய உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- கேஸ் சிலிண்டர்களில் பயன்படுத்தப்படும் ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாயை 5 வருடத்திற்கு மேல், மாற்றாமல் இருக்கும் பயனர்களின் விவரங்களை சேகரித்து சிறப்பு சலுகையுடன் ரப்பர் குழாயை மாற்றுவதற்கான வழிவகையும் இந்தியன் ஆயில் நிறுவனம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.