இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார் – மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..!

0

இந்திய ஹாக்கி அணி 3 முறை ஒலிம்பிக் பதக்கம் வெல்வதற்கு முக்கிய காரணமான ஜாம்பவான் பல்பீர் சிங் டோசன்ஞ், 95 வயதில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

ஹாக்கி ஜாம்பவான்:

இந்திய அணி 1948, 1952 மற்றும் 1956 ஆகிய 3 மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் பல்பீர் சிங். ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் இவர் செய்த சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக 1956ம் ஆண்டு ஒலிம்பிக் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா நெதர்லாந்தை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றது. அந்த ஆட்டத்தில் கேப்டன் பல்பீர் சிங் 5 கோல்கள் அடித்து உலக சாதனை புரிந்தார். இன்றளவும் இது முறியடிக்கப்படாமல் உள்ளது.

இவர் மற்ற வீரர்களால் பல்பீர் சிங் சீனியர் என அழைக்கப்படுவார். 95 வயதான இவர் மூச்சுத்திணறல், காய்ச்சல் காரணமாக கடந்த மே 8ம் தேதி மொஹாலியில் போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 18ம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக அரைகோமா நிலையில் இருந்த இவர் இன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை இயக்குனர் இயக்குனர் அபிஜித் சிங் தெரிவித்து உள்ளார். இதனால் விளையாட்டுத் துறை சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here