IND VS PAK – இந்திய அணியில் ஏற்படும் முக்கிய மாற்றம்.., இந்திய முன்னாள் வீரரால் ஏற்பட்ட நிலைமை!

0
IND VS PAK - இந்திய அணியில் ஏற்படும் முக்கிய மாற்றம்.., இந்திய முன்னாள் வீரரால் ஏற்பட்ட நிலைமை!
IND VS PAK - இந்திய அணியில் ஏற்படும் முக்கிய மாற்றம்.., இந்திய முன்னாள் வீரரால் ஏற்பட்ட நிலைமை!

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட்-க்கு அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

கே.எல்.ராகுலுக்கு எதிர்ப்பு!

ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக அரங்கேறி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இந்திய அணி தகுதி சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி சூப்பர் 4 சுற்றுக்கான ஆட்டத்தில் மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் கடந்த முறை தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்கும் வகையிலும், இதேபோன்று இந்திய அணி வெற்றியை தக்க வைக்கும் முறையிலும் முனைப்பு காட்டி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் இந்திய அணிக்கான பிளேயிங் லெவனின் பல மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் ருத்ர பிரதாப் சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தும் விளையாடுவதற்கான வாய்ப்பு இன்றி பெஞ்சில் அமர்ந்துள்ளார். எனவே இனி வரும் போட்டிகளில் இவரை களம் இறக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் இவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவர் அணியில் இடம் பிடித்தால் ஒருவர் பிளேயிங் லெவனின் இருந்து ஒருவர் வெளியேறும் நிலை ஏற்படும். அதன்படி பார்க்கையில் தினேஷ் கார்த்திக் மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை வெளியில் அமர வைக்க வேண்டும். இதில் ராகுல் தற்போது பார்மை மீட்டெடுக்க சிரமப்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தான் சரியாகி அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் சிறப்பாக விளையாடுவதற்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் இனி வரும் போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவனின் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here