பாகிஸ்தானிடம் தோல்வி அடைஞ்சிட்டு கத்துக்கோங்க.., இந்திய வீரர்களை சீண்டிய பாக்..,  நடிகை!!

0
பாகிஸ்தானிடம் தோல்வி அடைஞ்சிட்டு கத்துக்கோங்க.., இந்திய வீரர்களை சீண்டிய பாக்..,  நடிகை!!

இந்தியாவின் தோல்வி குறித்து பாகிஸ்தான் நடிகை கேலி செய்ததால், அவரை இந்திய ரசிகர்கள் மோசமாக கிண்டலடித்து வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தோல்வி அடைந்தது குறித்து ” நாங்கள் கற்றுக்கொள்கிறோம், சரி செய்து கொள்கிறோம், எங்களுக்காக ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி” எனக் கூறியிருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்


இந்த ட்விட்டர் பதிவுக்கு, பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி, கிண்டலடித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இந்த ட்விட்டுக்கு கமெண்ட் செய்த நடிகை, T20 உலக கோப்பை போட்டியில் இதே மாதிரி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து கற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த இந்திய ரசிகர் பாக் நடிகையை வச்சு செய்கின்றனர்.

5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்.., கடந்த 2007ல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.., ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

அதாவது பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான T20 போட்டியில் விளையாடி வருகிறது. ஆனால் இந்த போட்டியில் சொந்த மண்ணிலே இங்கிலாந்து அணியிடம் மோசனம் தோல்வியை பாகிஸ்தான் சந்தித்துள்ளது. சொந்த நாட்டின் அணி இது போன்று விளையாடுவதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இப்படி எதிரணியை கிண்டல் செய்ய வந்துவிட்டீர்கள் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here