உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்.. தங்கத்தை தவறவிட்ட இந்திய பெண்மணி., கடைசியில் கிடைத்தது இது தானா?

0
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்.. தங்கத்தை தவறவிட்ட இந்திய பெண்மணி., கடைசியில் கிடைத்தது இது தானா?
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்.. தங்கத்தை தவறவிட்ட இந்திய பெண்மணி., கடைசியில் கிடைத்தது இது தானா?

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை!!

செர்பியாவின் பெல்கிரேடு நகரில் 17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவுக்கான தகுதி சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. மூன்று தங்க பதக்கங்களை வென்று அசத்திய இந்திய வீராங்கனையான வினேஷ் போகத், மங்கோலியாவை சேர்ந்த குலான் பட்குயாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடிய போகத் 0-7 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில், அஜர்பைஜானின் லேலா குர்பானோவா எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய போகத் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் அடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here