பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செல்போன் செயலிகளை அழிக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு..!

0

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 முக்கிய செல்போன் செயலிகளை தங்கள் போன்களில் இருந்து உடனே அழித்துவிடுமாறு ராணுவ வீரர்களை ராணுவ தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

89 மொபைல்போன் செயலிகளை அழிக்க அறிவுரை..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற செல்போன் செயலிகள் மூலம் ராணுவ வீரர்களின் ரகசியம் கசிவதாக இந்திய ராணுவம் சந்தேகம் தெரிவித்துள்ளது. இதனால் பேஸ்புக்,டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரசெர், மினி, Zoom, கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளம் ஃபேக்டரி, டிண்டெர்,360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை உடனே அழித்துவிடுமாறு ராணுவ வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காந்தி குடும்ப அறக்கட்டளைகளை விசாரிக்க MHA குழு – மத்திய அரசு அதிரடி!!

இந்த செயலிகளால் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீன உளவு அமைப்புகளால் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் கண்காணிக்கப்படுவதால் இந்திய ராணுவம் நடவடிக்கையை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. ரகசியங்கள் கசிவதை தடுக்கும் வகையில் வரும் 15ம் முதல் அமலுக்கு வரும் இந்த ஒழுங்குமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here