மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2 ரிலீஸ் டேட்.., இது என்னடா.., சேனாதிபதி கமலுக்கு வந்த சோதனை!!

0
மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2 ரிலீஸ் டேட்.., இது என்னடா.., சேனாதிபதி கமலுக்கு வந்த சோதனை!!
மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2 ரிலீஸ் டேட்.., இது என்னடா.., சேனாதிபதி கமலுக்கு வந்த சோதனை!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் ஷங்கர். தற்போது இவர் இயக்கத்தில் இந்தியன் 2 உருவாகி வருகிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என்று படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகத்தில் காயத்துடன் போட்டோவை வெளியிட்ட விஜய் டிவி நடிகை .. கணவர் அடித்துவிட்டாரா? ரசிகர்கள் ஷாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here