இது என்னடா கமலுக்கு வந்த புது சோதனை.., தொடர்ந்து சிக்கலுக்கு தள்ளும் இந்தியன் 2 படப்பிடிப்பு!!

0
இது என்னடா கமலுக்கு வந்த புது சோதனை.., தொடர்ந்து சிக்கலுக்கு தள்ளும் இந்தியன் 2 படப்பிடிப்பு!!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படம்:

தமிழ் சினிமாவின் மூத்த கலைஞராக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் அமோக வெற்றியை அடைந்தது. மேலும் அதிக அளவில் வசூல் சாதனையும் செய்தது. இதனை தொடர்ந்து இரண்டு வருடங்களாக கிடப்பில் கிடந்த இந்தியன் இரண்டாம் பாகம் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நாளை முதல் கமலின் போஷன் படமாக்கப்பட உள்ளது. இதற்காக இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறாராம். இந்நிலையில் அவருக்கு மேக்கப் டெஸ்டிங் நடந்து வருகிறது. அதாவது இந்தியன் படத்தில் இடம் பெற்ற சேனாதிபதி (தாத்தா)கதாபாத்திரம் போன்று வடிவமைக்க மும்பையில் இருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு குழு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சின்ன வயசுலயே நித்யா மேனன் இவ்வளவு அழகா இருந்தாங்களா .., ஆஹா நம்ம கண்ணே பட்டுரும் போல!!

இதனை தொடர்ந்து கமலுக்கு மேக்கப் பரிசோதனை செய்துள்ளனர். ஒரு நாளில் மேக்கப் போடுவதற்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகிறதாம். குறிப்பாக கமல் நடிக்கும் ஒவ்வொரு நாளிலும் மேக்கப் போடவே நேரம் செலவாகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த சமயத்தில் நடிகர் கமல் பிக்பாஸ் சீசன் 6ல் வேற கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here