இந்தியன் 2 படத்திற்கு மீண்டும் வந்த நெருக்கடி.., இயக்குனர் சங்கர் கையாண்ட புதிய யுக்தி!!

0
இந்தியன் 2 படத்திற்கு மீண்டும் வந்த நெருக்கடி.., இயக்குனர் சங்கர் கையாண்ட புதிய யுக்தி!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்க மேலும் 3 முன்னணி இயக்குனர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படம்:

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் இந்தியன். இப்படத்தை பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கினார். இவர் இதற்கு முன் இயக்கிய காதலன், ஜென்டில்மேன் படங்களை விட இப்படம் அதிக வசூலை அள்ளியது. அதன் பின்னர் வித்தியாசமான கதைக்களத்துடன் பல வெற்றிப்படங்களை கொடுத்து சினிமா துறையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கமலை வைத்து கடந்த 2019ம் ஆண்டு இயக்க தொடங்கினர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திடீரென ஏற்பட்ட விபத்தில் இரண்டு பணியாளர்கள் உயிர் இழந்தனர். இதனால் படப்பிடிப்பு இந்நாள் வரை தள்ளிப்போனது.இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து பல பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. முன்னதாக இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் சேர்ந்து தயாரித்து வருகிறார்.

இதனால் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் சங்கர் ஆர் சி 15 படத்தையும், இந்தியன் படத்தையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். இதனால் சங்கர் பணியை குறைப்பதற்காக புதிய யுக்தியை கையாண்டு வருகிறார். அதாவது தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிம்புதேவன், அறிவழகன், வசந்த பாலன் ஆகியோரிடம் உதவியை நாடியுள்ளார். குரு அழைத்ததால் சிஷ்யர்கள் யோசிக்காமல் சரி என்று கூறி இயக்கி வருகிறார்கள். இப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here