சர்வதேச போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில் சிக்கல்…, மல்யுத்த வீரர்களின் போராட்டத்தால் எழும் விபரீதம்!!

0
சர்வதேச போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில் சிக்கல்..., மல்யுத்த வீரர்களின் போராட்டத்தால் எழும் விபரீதம்!!
சர்வதேச போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில் சிக்கல்..., மல்யுத்த வீரர்களின் போராட்டத்தால் எழும் விபரீதம்!!

பெண்கள் மீதான பாலியல் குற்றம் தொடர்பான புகார்களை முன் வைத்து இந்தியாவின் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலர், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதாவது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன், பாலியல் ரீதியாக விளையாட்டு வீராங்கனைகளை துன்புறுத்தி உள்ளதாக கருதி ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் தலைமையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்கள், சமீபத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற பகுதியில் போராட்டம் நடத்த முற்பட்டனர். ஆனால், டெல்லி காவல்துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தியதோடு அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் தங்களது ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிவோம் என நேற்று தெரிவித்து இருந்தனர். ஆனால், இவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் விவசாய அமைப்பினர், வீரர்களிடம் இருந்து பதக்கங்களை கைப்பற்றி விரைவில் உங்களது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

TNPSC Group 4.., காலியிடங்களை நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு, அடுத்த 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு நடத்த தவறினால், இந்திய வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், இந்தியாவில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றம் தொடர்பான போராட்டங்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இதனால் எதிர்வரும் ஆசிய சாம்பியன்ஷிப் டெல்லியில் நடத்த வாய்ப்பு குறைவுதான் என்றும் சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here