ஜப்பானை துவம்சம் செய்த இந்தியா – ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்

0
India Vs Japan

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அறிமுக ஜப்பான் அணியை நடப்பு சாம்பியன் இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜப்பான் அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 44 ரன்கள் எடுத்து. இந்தியா அணியில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது குறைந்த ஸ்கோர் ஆகும்.

அடுத்து களமிறங்கிய இந்தியா அணி விக்கெட் இழப்பின்றி 4.5 ஓவர்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜூனியர் உலககோப்பை போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here