இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளது. நாளை மறுநாள் (நவம்பர் 19) அகமதாபாத் மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ள இப்போட்டிக்கு இரு அணி வீரர்களும் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் நேற்று முன்தினம் (நவம்பர் 15) நடந்த இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி போட்டியை நேரில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது “அரையிறுதி போட்டியில் ஒவ்வொரு நிமிடமும் திக் திக்னு தான் இருந்துச்சு. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதுக்கு முகமது ஷமி தான் காரணம். கண்டிப்பாக இந்திய அணி இந்த முறை உலக கோப்பையை கைப்பற்றும்.” என தெரிவித்துள்ளார்.