தோனி இல்லாமல் செமி பைனலில் களமிறங்க இருக்கும் இந்தியா…, T20 WC சாம்பியன் பட்டத்தை வெல்லுமா??

0
தோனி இல்லாமல் செமி பைனலில் களமிறங்க இருக்கும் இந்தியா..., T20 WC சாம்பியன் பட்டத்தை வெல்லுமா??
தோனி இல்லாமல் செமி பைனலில் களமிறங்க இருக்கும் இந்தியா..., T20 WC சாம்பியன் பட்டத்தை வெல்லுமா??

தோனி இல்லாமல் முதன் முறையாக அரையிறுதி போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதனால், இவரது இடத்தை இந்த ஒரு வீரர் நிரப்புவதுடன் அணியின் வெற்றிக்கு வழிவகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரையிறுதியில் இந்தியா:

இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில், சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 வில் 3வது இடம் பிடித்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டிருந்தது. இதனால், இந்த முறை சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றாக வேண்டும் என்ற லட்சியத்தோடு களமிறங்கி அரையிறுதி வரை முன்னேறி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இல்லாமல் முதன் முறையாக, இந்தியா களமிறங்க உள்ளது என்பது குறிப்பிட்ட தக்கது. அதாவது, இதற்கு முன் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறி இருந்தது. இதில், தோனி கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டுமே களமிறங்கி இருந்தார்.

பயிற்சியின் போது விராட் கோஹ்லிக்கு காயம்?? அரையிறுதியில் களமிறங்குவாரா??

இந்த போட்டியில் நியூசிலாந்து எதிராக தோனி மற்றும் ஜடேஜா இருவர் மட்டுமே இந்திய அணியின் வெற்றிக்கு போராடி இருந்தனர். நடப்பு டி20 போட்டியில் இந்திய அணி நாளை எதிர்கொள்ள இருக்கும் அரையிறுதியில், இந்த இரு வீரர்களையும் இந்தியா மிஸ் செய்ய கூடும். இவர்களது இடத்தை, தற்போது உள்ள அணியில், ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் இவர்கள் நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here