T20 வடிவில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா…, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
T20 வடிவில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா..., வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
T20 வடிவில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா..., வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐசிசியானது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் (50 ஓவர்) தொடரின் அடுத்த பதிப்பான டி20 (20 ஓவர்) தொடரை கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த தொடரின் முதல் உலக கோப்பை ஆனது கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த நிலையில், அதனை வென்ற முதல் அணியாக இந்தியா திகழ்கிறது. இதன் தொடர்ச்சியே ஐபிஎல் தொடர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அளவுக்கு டி20 போட்டிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த போட்டியாக உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், இந்திய அணி இன்று தனது 200 வது சர்வதேச டி20 போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டியை பிரையன் லாரா மைதானத்தில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இதனை, ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் DD ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும், டிஜிட்டல் முறையில் இந்த தொடரை ஜியோ சினிமா ஆப் மூலம் இலவசமாக கண்டு களிக்கலாம். இந்த போட்டியானது, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here