வெளுத்து வாங்க இருக்கும் தென்மேற்கு பருவமழை…, வானிலை மையம் அறிவிப்பு!!

0
வெளுத்து வாங்க இருக்கும் தென்மேற்கு பருவமழை..., வானிலை மையம் அறிவிப்பு!!
வெளுத்து வாங்க இருக்கும் தென்மேற்கு பருவமழை..., வானிலை மையம் அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் அடித்து மக்களை வாட்டி வதைத்தது வருகிறது. ஒரு நிமிடம் கூட மக்கள், ஏசி, ஏர்குலர், பேன் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருக்க முடியாத நிலையில் இருந்தனர். இந்த கோடை வெயிலின் தாக்கத்தால் குறிப்பிட்ட சில நேரங்களில், வெளியில் கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆனது மக்கள் மகிழ்விக்கும் படியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, இந்தியாவில் வெளுத்து வாங்கிய வெப்ப அலையானது இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து, தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவ உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எங்க போனாலும் விக்-கோட போகும் விஜய்.., வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன் – கடும் கோபத்தில் ரசிகர்கள்!!!

மேலும், இனி வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைவதுடன் இந்தியாவின் உள்மாநிலங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, இன்று (மே 24) கேரளாவில் கனமழையும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழையும், இந்த மாநிலங்களின் மலைப் பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here