இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான இன்றைய போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. அதாவது, இலங்கையில் கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்து வரும் சூழலில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அந்த வகையில், இன்று மதியம் துவங்கிய போட்டியை மழை குறுக்கிட்டதால் போட்டி சற்று தாமதமாகத் துவங்கியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தொடர்ந்து, முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இன்னிங்ஸை துவங்கும் முன் மீண்டும் மழை பெய்யத் துவங்கியது. இப்போது, கனமழை காரணமாக இந்திய மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. தவிர, ஒரு புள்ளியை பெற்றதன் மூலம் ஆசிய கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.