
ஒருநாள் உலக கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா vs பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆன முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 10) நடைபெற இருந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால், Reserve Day முறைப்படி இன்று (செப்டம்பர் 11) தொடங்கியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அவர்களின் தேர்வு மிகவும் தவறானது என்பதை உணர்த்துவது போல் ரோஹித் சர்மா (56), சுப்மன் கில் (58) என இருவரும் அரைசதம் கடந்து வெளியேறினார். பின்னர் இணைந்த கிங் கோஹ்லி (122) மற்றும் கே எல் ராகுல் (111) இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர். 50 ஓவர் முடிவில் இருவரும் ஆட்டமிழக்காமல் சதம் கடந்ததால் 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது.
ஆசிய கோப்பை 2023: மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!!