முக்கிய வீரரை கழட்டி விட முயற்சிக்கும் பிசிசிஐ…, அப்படி என்ன தான் செஞ்சாரு??

0
முக்கிய வீரரை கழட்டி விட முயற்சிக்கும் பிசிசிஐ..., அப்படி என்ன தான் செஞ்சாரு??
முக்கிய வீரரை கழட்டி விட முயற்சிக்கும் பிசிசிஐ..., அப்படி என்ன தான் செஞ்சாரு??

இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளராக உள்ள புவனேஷ்வர் குமார் டி20 உலக கோப்பையில் சொதப்பியதை அடுத்து, பிசிசிஐயானது, இவருக்கு டெஸ்ட் ஒன்றை வைத்துள்ளது.

புவனேஷ்வர் குமார்:

நாளை முதல் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், மூத்த வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வு அளிக்காமல் அணியில் இணைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு காரணம், பிசிசிஐ இவரை அணியில் இருந்து கழற்றிவிட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது, நடந்து முடித்த டி20 உலக கோப்பையில், இளம் வீரரான அர்ஷ்தீப் சிங் கூட 10 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். ஆனால், புவனேஷ்வர் இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார்.

ஐபிஎல் 2023: பிரபல அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனமா?? வெளியாகி தகவல்!!

இதனால், பிசிசிஐயானது, நியூசிலாந்துக்கு எதிராக உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர்களுடன் இவரை இணைத்துள்ளது. இந்த தொடரில், இவர் இளம் வீரர்களுடன் போட்டியிட்டு தனது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இவரது இடம் இந்திய அணியில் உறுதியாகும். இல்லையென்றால், 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பெறுவார் என்பது கேள்விக்குறி தான் என பல தரப்பில் இருந்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here