சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா…, நேபாளம் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா..., நேபாளம் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா..., நேபாளம் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. ஆனால், இந்த போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், விளையாடி 2 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3 புள்ளிகள் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து, இந்திய அணி இன்று தனது 2வது லீக் போட்டியில் நேபாளம் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி விளையாட உள்ளது. கத்துக்குட்டி அணியான நேபாள அணி முதன் முறையாக சர்வதேச இந்திய இன்று எதிர்கொள்ள இருக்கிறது. இதனால், தங்களது சிறந்த ஆட்டத்தை நேபாள அணி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

சுப்மன் கில், ரோஹித் சர்மா (சி), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

நேபாளம் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், ரோஹித் பவுடல் (சி), ஆரிப் ஷேக், சோம்பால் கமி, திபேந்திரா சிங் ஐரி, குல்ஷன் ஜா, குஷால் மல்லா, கரண் KC, லலித் ராஜ்பான்ஷி, சந்தீப் லாமிச்சானே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here