சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்தியா…, முத்தரப்பு தொடரில் அசத்தல்!!

0
சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்தியா..., முத்தரப்பு தொடரில் அசத்தல்!!
சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்தியா..., முத்தரப்பு தொடரில் அசத்தல்!!

முத்தரப்பு தொடரில், இந்திய கால்பந்து அணி கிர்கிஸ்தான் அணியை 2 கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கி அசத்தி உள்ளது.

இந்திய அணி:

நடப்பு வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தங்களது அணியை வலுவாகும் முயற்சியில் இந்திய அணி இறங்கி உள்ளது. அதாவது, மியன்மார் மற்றும் கிர்கிஸ்தான் அணிகளுக்கு எதிராக முத்தரப்பு தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி மியன்மார் அணியை எதிர்த்து மோதியது. இதில், இந்திய அணி ஒரு கோல் வித்தியசத்தில் வெற்றி பெற்று அசத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, நேற்று தனது 2வது போட்டியில் இந்திய அணி கிர்கிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியின் முதல் பாதியிலேயே இந்தியாவின் சந்தேஷ் ஜிங்கன் (34 வது நிமிடத்தில்) கோல் அடித்து அசத்தினார்.

IPL-லுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் ட்விஸ்ட்…, அதிரடி முடிவை எடுக்குமா பிசிசிஐ??

இதனால், இந்திய அணி முதல் பாதியில், 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கேப்டன் சுனில் சேத்ரி கோலாக மாற்றி அசத்தினார். இந்த போட்டியில், கிர்கிஸ்தான் கடைசி வரை கோல் போடாத நிலையில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி இந்த முத்தரப்பு தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கி சாதனை படைத்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here