IND vs IRE 2023: இந்தியாவுக்கு எதிரான அயர்லாந்து அணி அறிவிப்பு…, வீரர்களுக்கான முழு விவரம் உள்ளே!!

0
IND vs IRE 2023: இந்தியாவுக்கு எதிரான அயர்லாந்து அணி அறிவிப்பு..., வீரர்களுக்கான முழு விவரம் உள்ளே!!
IND vs IRE 2023: இந்தியாவுக்கு எதிரான அயர்லாந்து அணி அறிவிப்பு..., வீரர்களுக்கான முழு விவரம் உள்ளே!!

சர்வதேச இந்திய அணியானது ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் அயர்லாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடருக்காக, பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக முதுகு வலியால் அவதிப்பட்ட டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டான பும்ரா, தற்போது முழு உடல் தகுதி பெற்று இந்திய அணிக்கு திரும்பி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த அயர்லாந்துக்கு எதிரான தொடர் மூலம், தனது உடற்தகுதியை நிலை நிறுத்தி கொண்டால் எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் இடம் பிடிப்பார் என பெரிதும் எதிர்பாக்கப்படுகிறது. பிசிசிஐ ஆனது இந்த தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது அயர்லாந்து அணியை அந்நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு எதிரான அயர்லாந்து அணி:

பால் ஸ்டிர்லிங் (சி), ஆண்ட்ரூ பால்பிர்னி, ராஸ் அடேர், மார்க் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், ஜோஷ் லிட்டில், ஃபியோன் ஹேண்ட், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வொர்காம், கிரேக் யங், பென் ஒயிட்.

உலகக் கோப்பை யுத்தத்திற்கு இன்னும் 2 மாதங்கள்…,பயிற்சியில் தீவிரம் காட்டும் அணிகள்!!

அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணி:

ஜஸ்பிரித் பும்ரா (சி), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here