அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்திய அணி…, அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரா??

0
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்திய அணி..., அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரா??
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்திய அணி..., அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரா??

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது இந்திய அணி ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான ஷெடுயூல் வெளியாகி உள்ளது.

IND vs IRE:

இந்திய அணியானது, தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் வரும் 22ம் தேதி முடிவடைய உள்ளது. இதையடுத்து, இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் வரும் 31ம் தேதி முதல் கவனம் செலுத்த உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தொடரானது, மே 28ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சர்வதேச இந்திய அணியானது, ஜூன் 7ம் தேதி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால், இந்திய அணியானது, அடுத்த மூன்று மாதங்களுக்கு பக்காவான ஷெடுயூலே தயார் செய்து வைத்துள்ளது.

IND vs AUS 1st ODI: ரொனால்டோ ஸ்டையிலில் முகமது சிராஜ்…, விக்கெட் எடுத்ததும் செய்த செயல் வைரல்!!

தற்போது, ஆகஸ்ட் மாதம் விளையாட உள்ள போட்டிகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை அயர்லாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here