IND VS AUS T20.., டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.., முழு விவரம் உள்ளே!!

0

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி உள்ளது. இதற்கான முழு விவரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா VS இந்தியா!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மா வழி நடத்த உள்ளார். மேலும் இந்திய அணியில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக், கே எல் ராகுல் போன்ற பல முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான முதல் போட்டி மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. இதனை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது T20 போட்டி நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. இந்த டிக்கெட்டுக்கான விலை ரூ.300 முதல் ரூ.10, 000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் இருந்தால் இந்த தொடருக்கான டிக்கெட்டை 300 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த T20 தொடருக்கான டிக்கெட் Paytm இன்சைடரிலும் கிடைக்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், நேரடி டிக்கெட் விற்பனை குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது வரை, ஆன்லைன் டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது. இந்த T20 தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால் அனைத்து ரசிகர்களும் போட்டியை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here