‘ஒரு வீரர் கூட 10 ரன்னை தாண்டவில்லை, 96 ஆண்டுகளில் முதல்முறை’ – இந்திய அணியின் பேட்டிங் பரிதாபங்கள்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் மிகவும் மோசமாக விளையாடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோஹ்லியின் கேப்டன்சியும் படுமோசமாக இருந்துள்ளது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியா vs ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி அன்று முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் கேப்டன் விராட் கோஹ்லி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 244 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆட்டமிழந்தது. 53 ரன்கள் முன்னிலையில் இந்தியா அணி தனது 2வது இன்னிங்க்ஸை துவங்கியது.

மோசமான சாதனை:

2 வது இன்னிங்சில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டாய் சரிந்தனர். வழக்கம் போல் தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா ஏமாற்றினார். அதன் பின் 3 வது பேட்ஸ்மேனாக பும்ராஹ் களமிறங்கினர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. சரி இந்த திட்டமாவது ஏதும் உதவி செய்ததா? என்று பார்த்தால் அதுவும் இல்லை.

இந்தியா அணி பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி விட்டனர். 2வது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்து தனது 9 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் மிகவும் மோசமான செய்தி என்னவென்றால் இந்திய அணியில் ஒருவர் கூட 10 ரன்களை தாண்டவில்லை என்பதே. இதன் மூலம் 96 ஆண்டுகளுக்கு பின் இந்தியா அணி இந்த மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1924 இல் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு எதிராக 30 ரன்களில் ஆட்டமிழந்தது . அதற்க்கு பின் இதுவே மோசமான சாதனையைகும்.

இந்தியா அணி பேட்ஸ்மேன்களின் ரன்கள் விவரம்:

விஹாரி – 8
ப்ரித்வி ஷா – 4
கோஹ்லி – 4
சாகா – 4
உமேஷ் யாதவ் – 4
பும்ராஹ் – 2
ஷமி – 1
ரஹானே – 0
புஜாரா – 0
அஸ்வின் – 0

ஒரு வீரர் கூட 10 ரன்களை தாண்டாதது தலைகுனிவான விஷயமே. மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் கோஹ்லியின் கேப்டன்சிக்கு ஆபத்து நேரிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here