ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி – வெற்றியுடன் துவக்குமா இந்திய அணி??

0

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி ஒருநாள், டி20 & டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 3 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அதனை இழந்தது. இன்று முதல் டி20 தொடர் தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இதனை சோனி சிக்ஸ், சோனி டென்1 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளன.

இந்தியா – ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தொடர் தோல்வி அடைந்த இந்திய அணி, 3வது போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று களமிறங்க உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணியில் காயம் காரணமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் டி20 தொடரில் இருந்து விலகி உள்ளார். இது இந்திய அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் 3 ஒருநாள் போட்டிகளிலும் அதிரடி காட்டி தொடர் நாயகன் பட்டத்தை வென்ற ஸ்டீவ் ஸ்மித் மிடில் ஆர்டரில் அணிக்கு அசுர பலமாக உள்ளார். மற்றபடி கேப்டன் ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் ஆகியோரும் சிறந்த பார்மில் உள்ளனர். இன்று போட்டி நடைபெற உள்ள கான்பெர்ரா மைதானம் பேட்டிங்கிற்கு உகந்தது என்பதால் இவர்களின் விக்கெட்டை கைப்பற்றுவதில் இந்திய பவுலர்கள் அதிக முனைப்பு காட்ட வேண்டி இருக்கும்.மறுபுறம் இந்திய அணியில் கேப்டன் விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா தவிர்த்து பிற பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். பந்துவீச்சிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் தாகூர், நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஐபிஎல் தொடரில் தனது யார்கர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்த நடராஜனுக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி தரவரிசையில் டி20ஐ பொறுத்தவரை இந்தியா 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும் உள்ளன. இத்தொடரை கைப்பற்றும் அணி ஒரு இடம் முன்னேற வாய்ப்பு உள்ளது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச அரங்கில் இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் டி20 போட்டிகளில் மோதி உள்ளன. அதில் இந்தியா 11 முறையும், ஆஸ்திரேலியா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டிக்கு முடிவு இல்லை.

உத்தேச 11 அணி:

இந்தியா – ஷிகர் தவான், கே.எல்.ராகுல் (wk), விராட் கோலி (c), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா / வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், டி நடராஜன், யூஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா

ஆஸ்திரேலியா – ஆரோன் பிஞ்ச் (c), மத்தேயு வேட், ஸ்டீவ் ஸ்மித், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி (wk), க்ளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க் / ஆண்ட்ரூ டை, ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here