‘டாப் வீரர்கள் இல்லை, கேப்டனாக ரஹானே’ – 2வது டெஸ்டில் வெற்றி பெறுமா இந்திய அணி??

0

அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி, டாப் பௌலர் முஹம்மது ஷமி ஆகிய வீரர்கள் அணியில் இருந்தபோதும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியின் முக்கிய வீர்களான விராட் கோஹ்லி, முஹம்மது ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார், ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பெறாத நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

முக்கிய வீரர்கள் இல்லாத இந்திய அணி:

இந்த போட்டியை தொடர்ந்து அடுத்து வரும் 3 போட்டிகளில் விளையாடாமல் அணியின் கேப்டன் விராட் கோலி நாடு திரும்புகிறார். முதல் போட்டியில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷமி விளையாட அனுமதிக்கப்படவில்லை. புவனேஷ் குமார், இஷாந்த் ஷர்மா ஆகிய முக்கியமான பௌலர்களும் காயம் காரணமாக விளையாட முடியவில்லை.

12 ஆண்டுகளில் முதல்முறை – விராட் கோஹ்லியின் சர்வதேச சதமில்லா 2020!!

இஷாந்த் சர்மா தனது பிட்னெஸை நிரூபித்தபோதும் அவரும் விளையாட அனுமதிக்கப்படவில்லை. தற்போது குவாரன்டைனில் இருக்கும் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார். இவ்வாறு முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் கேப்டன் விராட் கோஹ்லி இல்லாத இந்தியா அணி சற்று பலவீனமாகவே உள்ளது என்றும் கூறப்படுகிறது.

கேப்டனாக ரஹானே

இந்த போட்டியில் விராட் கோஹ்லிக்கு பதிலாக அஜிங்க்ய ரஹானே கேப்டன் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு முன்பு இரண்டு தடவை அவருக்கு கேப்டன் ஆக பொறுப்பு வகித்து வெற்றியை தேடித்தந்த அனுபவமும் இருந்தபோதிலும், ஆஸ்திரேலியா போன்ற வலிமை மிகுந்த ஒரு அணியை அவர்களது சொந்த மண்ணில் சந்திப்பது பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2018-19 டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா தற்போது முக்கிய வீர்கள் இருந்தும் படுதோல்வியை சந்திருந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இரண்டாவது போட்டியில் முக்கிய வீர்கள் பலரும் இல்லாத நிலையில் இந்தியாவின் வெற்றி குறித்து கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here