இந்திய அணியில் ஏற்படும் மாற்றம்.., கைநழுவி போகும் வெற்றி.., ரோஹித் எடுக்க போகும் முடிவு என்ன?

0
எந்த அணியிலும் இடமில்லை.., இளம் வீரரை ஏமாற்றிய ரோகித் சர்மா.., திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!
எந்த அணியிலும் இடமில்லை.., இளம் வீரரை ஏமாற்றிய ரோகித் சர்மா.., திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் சிறப்பாக ஆடாத நிலையில் அவருக்கு பதில் இந்திய அணியில் இடம் பிடிக்க இரண்டு வீரர்கள் இருப்பதால் ரோஹித் எந்த மாதிரியான முடிவு எடுக்க போகிறார் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

இந்தியா வெற்றி பெறுமா!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான மூன்றாவது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இன்று இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் பிளேயிங் லெவனின் ரோகித் சர்மா பல முக்கிய மாற்றங்கள் எடுக்க வேண்டிய இடத்தில் உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தகுதி சுற்று ஆட்டத்தில் இடம் கிடைக்காத ரிஷப் பந்துக்கு சூப்பர் 4 சுற்றுக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய ரிஷப் பந்த் மோசமான ரன்களுடன் ஆட்டம் இழந்து வெளியேறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய போது அவர் டி20, ஒருநாள் தொடர்களில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இதனால் இன்று நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பந்த் களமிறங்குவது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் அவர் களமிறங்கவில்லை என்றால் அவருக்கு பதில் இஷான் கிஷன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக ஆடக்கூடிய நிலையில் வெளியில் அமர்ந்துள்ளனர். இவர்கள் இருவருமே தங்களுக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்திய அணி வெற்றி பெறும் தருணத்தில் ஒரு முக்கிய பங்காக இருந்துள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் இவர்கள் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும் முழுமையான ப்ளெயின் லெவனை இந்திய அணி வெளியிடாத நிலையில் ரோகித் சர்மா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here