இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடருக்கான பலமான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸி.யின் டி20 அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 20, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் மொகாலி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடருக்கு 15 வீரர்கள் அடங்கிய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் நட்சத்திர வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் வார்னருக்கு பதில் கேமரூன் கிரீன் அணியில் இணைந்துள்ளார். மேலும் அனைத்து அணிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் T20 உலக கோப்பையில் விளையாட உள்ளனர். இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளுக்கு தற்போது T20 தொடரில் விளையாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்து உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக, ஆஸ்திரேலிய அணி உட்பட மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து நாடுகளுக்கு பயணித்து அந்த அணிகளுக்கு எதிராக போட்டியை மேற்கொள்ள உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகா், டிம் டேவிட், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மாா்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சா்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வாா்னா் (உலகக் கோப்பை போட்டிக்கு மட்டும்), கேமரூன் கிரீன் (இந்திய தொடருக்கு மட்டும்), ஆடம் ஸாம்பா.