இந்திய அணியின் பயிற்சியாளரை நீக்கிய பிசிசிஐ?? T20 உலக கோப்பையை வெல்லாததால் எடுத்த அதிரடி முடிவு!!

0
இந்திய அணியின் பயிற்சியாளரை நீக்கிய பிசிசிஐ?? T20 உலக கோப்பையை வெல்லாததால் எடுத்த அதிரடி முடிவு!!
இந்திய அணியின் பயிற்சியாளரை நீக்கிய பிசிசிஐ?? T20 உலக கோப்பையை வெல்லாததால் எடுத்த அதிரடி முடிவு!!

டி20 உலக கோப்பையை வெல்லாததால், பிசிசியானது முதலில் தேர்வு குழுவை நீக்கியது. இதனை தொடர்ந்து, பயிற்சியாளரையும் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிசிசிஐ:

இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல, மற்ற அணிகளுக்கு எதிராக பல 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வெற்றியும் பெற்றது. ஆனாலும், டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியுடனே வெளியேறி பெரும் அதிர்ச்சியை தந்தது. இதனால், பல்வேறு விமர்சனங்களுக்கு இந்திய அணியும், பிசிசிஐயும் உள்ளானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து, பிசிசிஐயானது, உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்த, சேத்தன் ஷர்மா தலைமையிலான குழுவை நிக்கி அதிரடியான முடிவை எடுத்திருந்தது. இதன் பிறகு, புதிய தேர்வுக் குழுவை உருவாக்க பிசிசியானது தீவிரமாக இறங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை டி20 தொடருக்கான கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

வெண்கலப் பதக்கத்தை இழந்த இந்தியா…, முதலிடத்தை தட்டி தூக்கிய சீனா!!

இந்நிலையில், இந்திய அணிக்கு மன நல பயிற்சியாளராக இருக்கும், பேடி அப்டனையும் பிசிசிஐ நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலக கோப்பை தொடருடன் இவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அதனை பிசிசியானது நீட்டிக்க முன்வரவில்லை. இதனால், பிசிசிஐ இவரை ஓரம் கட்ட இருப்பதாக தெரிகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரது, மனநல பயிற்சியில் தான், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பார்மின்றி தவித்த விராட் கோஹ்லி அதிரடி காட்ட தொடங்கினார் என்பது குறிப்பிட்ட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here