அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா… மகிழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!!!

0

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா சாதனை படைத்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 32,36,63,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் அமெரிக்காவில் 32,33,27,328 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன.

கொரோனா முதல் அலை பரவ தொடங்கிய காலத்தில் இருந்தே மக்கள் காதுகளில் ஓயாமல் ஒலித்து கொண்டிருக்கும் வார்த்தை தடுப்பூசி. முதல் அலையின் போது தடுப்பூசி இல்லாததால் அதன் பரவல் அதிக காலம் நீடித்தது. ஆனால் இரண்டாம் அலையின் போது உலக நாடுகளின் கையில் தடுப்பூசி இருந்தது. எனவே கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இது விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது.

 

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது வரை இந்தியா முழுவதும் 32,36,63,297 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது அமெரிக்க அரசு அந்நாட்டு  மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கையை விட அதிகம். அமெரிக்காவில் மொத்தம் 32,33,27,328 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று (ஜூன் 27 2021) மட்டும் 17,21,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தேதி ஜனவரி மாதம் 16 ஆம் தொடங்கப்பட்டது. அதே போல அமெரிக்காவில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here