இன்ஸ்டாகிராமில் பிழை.., கண்டுபிடித்த இந்திய மாணவன்! பேஸ்புக் என்ன செய்தது தெரியுமா !!!

0

பேஸ்புக் நிறுவனம் தங்களின் பயன்பாடுகளில் இருக்கும் குறைகள் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இதையடுத்து அதில் இருக்கும் பிழையை இந்தியாவை சேர்ந்த பொறியியல் மாணவர் மயூர் கண்டறிந்து கூறியுள்ளார்.அதற்காக அவருக்கு பேஸ்புக் நிறுவனம் ரூ.22 லட்சத்தை பரிசுத் தொகையாக வழங்கி உள்ளது.

பேஸ்புக் பிழை

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா ஆகிய இரண்டுமே தங்களின் பொழுதை போக்கவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும்,அரட்டை அடிக்கவும், உலகத்தின் நிலவரங்களை அறியவும் உதவ கூடிய ஒன்று. மேலும் இது போன்ற தளங்கள் எந்த அளவிற்கு பயனுள்ளதாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் நிறைந்தவையே.

அதாவது அவர் அவர்களுக்கென தனி தனி கணக்குகள் இருந்தாலும் கூட இதனை ஹக் செய்து பயனர்களின் தகவல்களை திருடி அதை வைத்து அவர்களை மிரட்டுவது போன்ற குற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் பெண்களே இதில் அதிகம் பாதிப்படைகின்றனர். இது போன்ற தவறுகளை கண்டறிவது மற்றும் களைவது போன்ற செயல்கள் அந்த நிறுவனங்களுக்கு சவாலாக தான் இருக்கிறது. இந்நிலையில் தான் தங்களின் தளங்களில் இருக்கும் பிழைகளைக் கண்டறிந்து தெரிவிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கணிப்பொறியியல் மாணவர் மயூர், இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதில் உள்ள ஒரு பிழை உள்ளதாக கூறியுள்ளார் . அதாவது, அந்த தனிப்பட்ட பயனர்களின் கணக்கிற்குள் எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின் புகைப்படங்கள், ஸ்டோரீஸ், ரீல்ஸ் ஆகியவற்றை பார்க்க வைக்கிறது என்பதை கண்டறிந்தார். இதனை ஏப்ரல் 16ம் தேதி நடைபெற்ற பேஸ்புக் போட்டியில் தெரிவித்தார்.

இதையடுத்து ,இந்த பிழை பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குமாறு பேஸ்புக் நிறுவனம் மயூரிடம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் அந்த பிழை தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார் மயூர். இந்த தவறை ஜூன் 15-ம் தேதி சரி செய்தது. மேலும் பிற்காலத்தில் இது போன்ற தகவல்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று கூறி வெற்றி பெற்ற பரிசு தொகையான 30 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.22 லட்சத்தை வழங்குவதாக அறிவித்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here