தென்னாப்பிரிக்காவுக்கு மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா!!

0

தென்னாப்பிரிக்க அரசின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான எச்ஐஎல் என்ற இந்திய நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்புப் பரிந்துரை:

மலேரியா, உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு, 228 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர் என்றுக் கூறப்படுகிறது. டிடிடி மருந்து மலேரியா கொசு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் சிறந்த இரசாயனம் என்று உலக சுகாதார அமைப்புப் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம்:

1954 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, உலகளவில் டிடிடி மருந்தின் ஒரே உற்பத்தியாளராக உள்ள எச்ஐஎல் நிறுவனம், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக, டிடிடி மருந்தை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் கடந்த ஓர் ஆண்டில் நமது நாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு இம்மருந்தை விநியோகித்துள்ளது மட்டுமில்லாமல், பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மருந்தை தென்னாப்பிரிக்க அரசின் சுகாதாரத் துறை, மொசாபிக்கிற்கு அருகில் உள்ள 3 மாகாணங்களில் பயன்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here