தொடர்ந்து அதிகரிக்கும் பாதுகாப்பு வீரர்களின் தற்கொலை எண்ணிக்கை – காரணம் என்ன??

0

இந்திய நாட்டு மக்களை பெரிதும் பாதுகாப்பாக காத்திருப்பது ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தான். ஆனால் சமீப காலமாக அவர்களின் தற்கொலை எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

இந்திய பாதுகாப்பு படையினர்

நமது நாட்டிற்குள் நம்மை காவல் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இதே போல் நாட்டிற்கு வெளியே மற்றும் எல்லை பகுதியில் மக்களை பாதுகாத்து வருவது ராணுவ படையினர், கடல் படையினர் மற்றும் விமான படையினர் தான். அவர்கள் அனைவரும் தன் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் தனது தாய் நாட்டிற்காக இரத்தம் சிந்தி போராடி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இதில் ஓர் வருத்தமளிக்கும் விஷயமும் மறைந்துள்ளது. அது என்னவென்றால் சில காலமாகவே இவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை கணக்கெடுப்பில் மொத்தம் 787 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதில் 591 ராணுவ வீரர்கள், 60 விமான படையினர் மற்றும் 6 கடற்படையினர் ஆவர்.

#INDvsENG ஒரு நாள் போட்டி – நிதானமாக விளையாடும் இந்திய அணி!!

இந்த தகவல் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று அனைவரும் வினவி வருகின்றனர். மேலும் சிலர் இதற்கு அவர்களுக்கு உயர் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தம் தான் இவர்களின் தற்கொலைக்கு காரணம் என்று கூறுகின்றனர். இது பற்றிய உண்மை தன்மை விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here