‘அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு’ – விருதுக்கு தேர்வான வீரர் & வீராங்கனைகள்!

0
'அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு' - விருதுக்கு தேர்வான வீரர் & வீராங்கனைகள்!
'அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு' - விருதுக்கு தேர்வான வீரர் & வீராங்கனைகள்!

2022 ஆண்டின் ICC மாத வீரர் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியின் வீராங்கனை மற்றும் ஜிம்பாப்வே வீரர் ஆகியோர் ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ICC Player of Month:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்க படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சிறப்பாக செயல்பட்ட டாப் வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இம்மாதம் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறாத நிலையில், இந்திய பெண்கள் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விருது பட்டியலில் இடம் பிடித்து பெருமை சேர்ந்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவர் பார்படாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். அதே போன்று இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 31 பந்தில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது ஐசிசி மாத வீரர் விருதுகளுக்கான பட்டியலில் இணைத்துள்ளார்.

அதே போன்று மற்றொரு விருதுக்கு ஜிம்பாப்வே அணியில் மிடில் ஆர்டரில் கலக்கி வரும் சிக்கந்தர் ராசா பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆசிய அணிகளுக்கு எதிராக விளையாடிய போது மூன்று சதங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளார். அதே போன்று இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மறுமுனையில் உதவ யாரும் இல்லாததால் ஆட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் ராசா தற்போது ஐ.சி.சி சார்பில் வழங்கப்படும் விருதை பெற உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here