T20 WC 2022: இந்தியா படைத்த மோசமான சாதனை…, இது கூட ஒரு ரெக்கார்ட்டா??

0
T20 WC 2022: இந்தியா படைத்த மோசமான சாதனை..., இது கூட ஒரு ரெக்கார்ட்டா??
T20 WC 2022: இந்தியா படைத்த மோசமான சாதனை..., இது கூட ஒரு ரெக்கார்ட்டா??

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை படைக்காத ஒரு மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அந்த சாதனை பற்றி இப்பதிவில் காணலாம்.

டி20 உலக கோப்பை:

இந்திய அணி நடப்பு டி20 உலக கோப்பையில் அரையிறுதியுடன் திரும்பினாலும், பல சாதனைகளை படைத்துள்ளது. இதில், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட அதிக ரன்கள் மற்றும் விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். இதே போல, இதுவரை நடந்த டி20 உலக கோப்பையில் படைக்காத மோசமான சாதனை ஒன்றையும் இந்தியா படைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, இந்த உலக கோப்பையில் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளின் பவர் பிளே முடிவில், 31, 32, 33, 37, 46 மற்றும் 38 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து போட்டிகளிலும் ஒரு விக்கெட்டையும் இழந்திருந்தது. ஒரு போட்டியில் கூட இந்திய அணி பவர் பிளேயில் 50 ரன்களை கடக்கவில்லை. இதனால் இந்திய அணியின் பவர் பிளே ரன்ரேட்டானது வெறும் 6.2 ஆக தான் உள்ளது.

ராகுல் டிராவிட் இதுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவார்…, பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்!!

இந்த ரன் ரேட்டை, உலக கோப்பையில் பங்கு பெற்ற 16 அணிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா 15 வது இடத்தில் உள்ளது என்பது மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது. கடந்த உலக கோப்பை கூட இந்திய அணி 8.7 ரன் ரேட்டை வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் போட்டிகளில், இந்த உலக கோப்பையில் செய்த தவறுகளை இந்திய அணி சரி செய்து கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here