இந்தியாவில் கணிசமாக உயரும் ரயில் கட்டணங்கள் – பயணிகள் பலத்த அதிர்ச்சி!!

0
ரயில்வே பயணிகள் கவனத்திற்கு - பிப்ரவரி 14 முதல் அமலாகும் கூடுதல் தளர்வுகள்!!
ரயில்வே பயணிகள் கவனத்திற்கு - பிப்ரவரி 14 முதல் அமலாகும் கூடுதல் தளர்வுகள்!!

இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களின் மேம்பாட்டு வசதிக்காக, பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ரயில் கட்டணம் உயர்வு:

இந்தியாவில் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர். இவர்களிடம் இருந்து, ரயில் நிலையங்களின் மேம்பாட்டு வசதிக்காக கூடுதல் கட்டணம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொலைதூர ரயில் கட்டணம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ரிசர்வேஷன் இல்லாத பெட்டிகளில் பயணிப்போரிடம் டிக்கெட் கட்டணத்துடன் தலா 10 ரூபாய் கூடுதலாக பெறவும், ஏசி வசதி இல்லாத மற்றும் 2 கிளாஸ் இருக்கை மற்றும் பர்த் வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்போரிடம் 25 ரூபாய் கூடுதலாக பெற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும், ஏசி வசதி உள்ள பெட்டிகளில் பயணம் செய்வோரிடம் 50 ரூபாய் கூடுதலாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போக, மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும் எனவும், இத்தகைய ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகளாக அவர்கள் இருந்தால், டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து பாதி கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், பயணி புறப்படும் இடமும், சேரும் இடமும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் என்றால் கட்டணத்துடன் 1.5% கூடுதலாக வசூலிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் சீசன் டிக்கெட் வசதியை பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த கட்டண கட்டுப்பாடு செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here