அட்ரா சக்க.,மாதம் ரூ.50 கட்டுங்க, உங்களுக்கு ரூ.34 லட்சம் கிடைக்கும் – மத்திய அரசின் மெகா பம்பர் திட்டம்!!

0

நாடு முழுவதும், அஞ்சல் அலுவலகத்தில் தினசரி 50 ரூபாய் முதலீடு செய்து, முதிர்வுத் தொகையாக 34 லட்சம் ரூபாய் காப்பீடு பெரும், அதிரடி திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசு திட்டம் :

மக்கள் அதிகம் முதலீடு செய்து, காப்பீடு தொகை பெறும் முக்கிய சேவைகளில் ஒன்று அஞ்சல் சேவை. தற்போது, இந்திய அஞ்சல் துறை கிராம சுரக்ஷா யோஜனா என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 19 முதல் 55 வயது உள்ள யார் வேண்டுமானாலும் சேரலாம். அஞ்சல் துறை கிராமப்புற காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, பயன்பெறும் பயனாளி ஒருவர், திடீரென மரணம் அடைந்தால் அவர்களுக்கு இந்த முதிர்வுத் தொகையை அரசாங்கம் கொடுக்கும்.

இந்தத் திட்டம் வாயிலாக ரூ.10,000 முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் தொகையை மாதத் தவணையாகவோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ செலுத்தலாம். 19 முதல் 55 வயது உள்ள ஒருவர் மாதம் ரூ.1515 முதலீடு செய்து, முதிர்வுத் தொகையாக ரூ. 31.60 லட்சம் பெறலாம்.

அதேபோல், 19 வயதிலிருந்து மாதம் ரூபாய் 1411 செலுத்தி, 60 ஆண்டுகள் கழித்து ரூ. 34.60 லட்சம் பெறலாம். இந்தத் திட்டம் குறித்து முழு விவரங்களை அறிந்து கொண்டு, பயனர்கள் பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here