ரிஷப் பண்ட்-க்காக இந்திய வீரர்கள் செய்ததை பாருங்கள்…, வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ!!

0
ரிஷப் பண்ட்-க்காக இந்திய வீரர்கள் செய்ததை பாருங்கள்..., வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ!!
ரிஷப் பண்ட்-க்காக இந்திய வீரர்கள் செய்ததை பாருங்கள்..., வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ!!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி இன்று மோத உள்ள நிலையில், பிசிசிஐயானது ரிஷப் பண்ட் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரிஷப் பண்ட்:

கடந்த ஆண்டில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தடுமாறிய ரிஷப் பண்ட், டெஸ்ட் தொடர்களில் மட்டும் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்களை குவித்தார். இதன் மூலம், பிசிசிஐயால் 2022 ன் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாத இறுதியில், பங்களாதேஷிற்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வெற்றியுடன் ஆண்டை முடித்தது இந்திய அணி.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் பிறகு, இன்று தான் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியை விளையாட இருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் ரிஷப் பண்ட் டெல்லி-உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலையில், பயங்கரமான கார் விபத்துக்கு உள்ளனர். இந்த விபத்தில் ரிஷப் பண்ட், தலை, முதுகு, முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தியன் சூப்பர் லீக்: ஒடிசாவை வீழ்த்திய மும்பை…, முதலிடத்தை தட்டி தூக்கி அசத்தல்!!

இவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதால், நார்மல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் விரைவில் குணமடைய வேண்டி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் சக வீரர்களான ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், இஷான் கிஷன், சுப்மன் கில் உள்ளிட்டோர் வாழ்த்திய வீடியோ ஒன்றை பிசிசிஐயானது வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here