கொரோனா அச்சத்திற்கு நடுவில் ஜன.31 ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் – பிப் 1ல் தாக்கல் ஆகிறது மத்திய பட்ஜெட்!!

0

இந்தியா முழுவதும் கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 பட்ஜெட் கூட்டத்தொடர்  :

இந்தியா முழுவதும் டெல்டா வைரஸ் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு அண்மையில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, எதிர்பார்த்தபடி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்த தகவலை நேற்று வெளியிட்ட நாடாளுமன்ற விவகார அமைச்சகம், வருகிற ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ஆம் தேதி வரை இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என்றும், பிப்ரவரி 1ம் தேதி  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிவித்துள்ளது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கும், இந்த கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பகுதி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரையும், இரண்டாவது பகுதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது, அரசின் அறிவிப்புகள் திருப்திகரமாக இல்லை என்பதால், இந்த ஆண்டு இந்த பட்ஜெட் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த ஆண்டு, தனிநபர் வருமான வரிக்கான உச்ச வரம்பு உயர்த்தப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வரிவசூல் மிக அதிகமாக இருப்பதால், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 6.8% குறைவாக இருப்பதால் அரசின் பல்வேறு கூடுதல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here