6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதும் ஆசிய கோப்பை போட்டி 2023 இந்த ஆண்டு இலங்கையில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிய முதல் ஆட்டம் கனமழை ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா நேபாளத்துடன் மோதிய போட்டியின் போதும் மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த ஆட்டத்தில் இந்திய அணி விக்கெட்டுகள் எதுவும் இல்லாமல் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதும் போட்டியில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த போட்டி அக்டோபர் 10 ஆம் தேதி பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.