இந்தியாவில் இதுவரை 358 நபர்கள் ஓமைக்ரனால் பாதிப்பு – தமிழகத்தில் மட்டும் இவ்ளவா??

0

இந்தியாவில் இதுவரை  358 நபர்கள் உருமாறிய ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மத்திய அரசு அறிக்கை :

உலகம் முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களையும், ஏற்கனவே வைரசால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையும் இந்த வைரஸ் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸால் இந்தியாவின், 17 மாநிலங்களில் மட்டும் இதுவரை 358 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் 114 நபர்கள் குணம் அடைந்துள்ளதாகவும் 244 நோயாளிகள் மட்டும் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக மஹாராஷ்டிராவில் 58, டெல்லியில் 67, தெலுங்கானாவில் 38,  தமிழகத்தில் 34, கர்நாடகாவில் 31, குஜராத்தில் 30, கேரளாவில் 27, ராஜஸ்தானில் 22 என பாதிக்கப்பு பதிவாகியுள்ளது. இதுமட்டுமில்லாமல் ஹரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 4 முதல் 5 வரை ஓமைக்ரான்  நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் தடுப்பூசி செலுத்துதலை, மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here