சர்வதேச இந்திய ஆடவர் அணியானது தற்போது உலக கோப்பை தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடர் வரும் நவம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்திய அணி வரும் நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

- உலக கோப்பைக்கான அரையிறுதி போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி அறிவிக்கப்படும்.
- சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் இஷான் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு
- ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாடிய இளம் வீரர்களும் அணியில் இடம் பெற வாய்ப்பு அதிகம்.
- ஐபிஎல் சிறந்த வீரர்கள் விளையாட வாய்ப்பு
- காயத்தால் அவதிப்படும் ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு பொருத்தமாக இருக்க வாய்ப்பில்லை.