சோலி முடிஞ்சு.,இனி இவங்களுக்கெல்லாம் புதிய சிம் கார்டு கிடையாது – அரசு போட்ட அதிரடி கண்டிஷன்!!

0
சோலி முடிஞ்சு.,இனி இவங்களுக்கெல்லாம் புதிய சிம் கார்டு கிடையாது - அரசு போட்ட அதிரடி கண்டிஷன்!!
சோலி முடிஞ்சு.,இனி இவங்களுக்கெல்லாம் புதிய சிம் கார்டு கிடையாது - அரசு போட்ட அதிரடி கண்டிஷன்!!

நாட்டில் புதிய சிம் கார்டு விற்பனை குறித்த, அதிரடி விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இனி அதன்படி மட்டுமே, சிம் கார்டு விற்கப்பட வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிமுறை:

நாடு முழுவதும், செல்போன்களில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளை பெற, இதுவரை உறுதியான கண்டிஷன்கள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஒருவர் எத்தனை புதிய சிம் கார்டுகளை வேண்டுமானாலும், ஆதார் விவரங்களை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது. தற்போது இதில் மாற்றம் கொண்டு வரும் விதமாக, மத்திய தொலைத்தொடர்புத்துறை புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கண்டிப்பாக புதிய சிம் கார்டு விற்கப்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக ஆதார் உள்ளிட்ட எந்த விவரங்களை கொடுத்து வேண்டுமானாலும் இந்த புதிய சிம் கார்டு பெறலாம் என்றும், அதேசமயம் kyc நடைமுறையை முடிக்காதவர்கள் புதிய சிம் கார்டு பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் – இதுவரை இல்லாத புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு அதிரடி நடவடிக்கை!!

இந்த விதிமுறைகளை மீறி சிம் கார்டு விற்பனை செய்தால், ஏற்படும் முழு இழப்பையும் சிம்கார்டு வழங்கிய நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய சிம் கார்டு வாங்கும் பயனர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here