
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வீரரான ஷிகர் தவான் இடம்பெறாத நிலையில் T20 உலக கோப்பையிலாவது இவரை அணியில் எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
அணியில் இடம் பெறுவாரா!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கடைசியாக நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் 8 வது முறையாக பட்டத்தை வெல்வது கேள்விக்குறியாக உள்ளது. ஆசிய கோப்பையில் இடம் பிடித்துள்ள வீரர்கள் ஆன தீபக் ஹூடா, ரிஷப் பந்த் மற்றும் பல வீரர்கள் தங்களது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டம் இழந்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் இவர்களின் மீது இருந்த நம்பிக்கை தற்போது போய்விட்டது. இந்நிலையில் இந்திய அணி இனி வரும் போட்டியிலாவது சிறப்பாக விளையாடுமா என தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் முக்கிய கருத்து ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது ஆசிய கோப்பை தொடரில் தான் இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. இவரை தான் ரசிகர்கள் அனைவரும் செல்ல பெயர் வைத்து கப்பார் என அழைக்கின்றனர். எனவே அடுத்து வரும் டி20 உலக கோப்பையிலாவது இவரை அணியில் எடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஷிகர் தவான் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் ஒரு சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். அந்த போட்டிகளில் சதம் விளாசி தனது ஆட்டத்தை நிரூபித்துள்ளார். ஆனாலும் இவருக்கு ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைக்கவில்லை. இவர் டி20 தொடரில் நல்ல பார்மில் இருப்பதால் உலக கோப்பையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேலாவது BCCI சிறந்த வீரர்களை தேர்வு செய்து t20 உலக கோப்பையில் இந்திய அணியை களம் இறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.