நாடு முழுவதும் விலை அதிகரிக்கப்பட பாராசிட்டமால் உள்ளிட்ட 800 மருந்துகள் – பொதுமக்கள் பலத்த அதிர்ச்சி!!

0
நாடு முழுவதும் விலை அதிகரிக்கப்பட பாராசிட்டமால் உள்ளிட்ட 800 மருந்துகள் - பொதுமக்கள் பலத்த அதிர்ச்சி!!
நாடு முழுவதும் விலை அதிகரிக்கப்பட பாராசிட்டமால் உள்ளிட்ட 800 மருந்துகள் - பொதுமக்கள் பலத்த அதிர்ச்சி!!

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பாராசிட்டமால், அசித்ரோமைசின் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மருந்து விலை உயர்வு :

கொரோனா பரவலுக்கு பிறகு, இந்தியாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடந்த சில தினங்களாக, எரிபொருள்கள் மற்றும் சமையல் கியாஸ் விலை திடீரென அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலையை 10 சதவீதமும், பட்டியலிடப்படாத மருந்துகளின் விலை 20% உயர்த்துமாறு  மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைத்தன. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கிய மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட அத்தியாவசியமான மருந்துகளின் விலையை 10.7 சதவீதமும், பட்டியலிடப்படாத  மருந்துகளின் விலையை 10 சதவீதமும் உயர்த்துவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த மருந்துகளில் கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பாராசிட்டமால், ஃபெனோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here