கொரோனாவால் இந்தியாவில் 2021ல் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

0

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2021ம் ஆண்டு இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

கோரத்தாண்டவமாடும் கொரோனா..!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனாலும் பலகட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால் அடுத்த ஆண்டுதான் தடுப்பு மருந்து தயாராக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு அடுத்த ஆண்டு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் உலகத்தின் நிலைமை என்ன என்பது குறித்து அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆய்வு நடத்தி உள்ளது.

ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து மத்திய குழு ஆய்வு..!

இதையடுத்து அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால் 2021 குளிர்கால இறுதியில் இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் உலக அளவில் பாதிப்பானது 24.9 கோடியை எட்டியிருக்கும் என்றும் 18 லட்சம் பேர் பலியாவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் 84 நாடுகளின் தகவல்கள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக அளவில் தற்போது 1.18 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 5.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். உலக அளவில் தினசரி 5.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 5,500 பேர் பலியாகின்றனர். மேலும் இந்தியாவில் தற்போது ஒருநாளில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 1 லட்சம் பாதிப்பு இலக்கு எட்ட 110 நாட்கள் ஆன நிலையில் அடுத்த 49 நாளில் 6 லட்சமானது. இந்நிலையில் கொரோனா மருந்து கண்டுபிடிக்காவிட்டால் இந்தியாவில் 2021ல் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here