வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட் – இனி ஒரு நிமிடத்தில் லைசென்ஸ்! சாலை போக்குவரத்து துறை அதிரடி!!

0
வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட் - இனி ஒரு நிமிடத்தில் லைசென்ஸ்! சாலை போக்குவரத்து துறை அதிரடி!!
வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட் - இனி ஒரு நிமிடத்தில் லைசென்ஸ்! சாலை போக்குவரத்து துறை அதிரடி!!

வாகன ஓட்டிகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லாமலே ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சான்றுகளை பெற, சாலை போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்:

நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம், ஆர் சி புக் போன்றவற்றைப் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால், நாள்தோறும் இந்த அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனை தவிர்ப்பதற்காக, மத்திய சாலை போக்குவரத்து துறை புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, எப் சி, ஆர் சி புக், விவரங்களில் மாற்றம், சர்வதேச ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு உள்ளிட்ட 58 வகையான சேவைகளை ஆன்லைனிலேயே பெறும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கான கட்டணங்களையும் இனி ஆன்லைனிலையே செலுத்திக் கொள்ளலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பொதுமக்களின் நேரத்தை மிச்சம் செய்யும் இந்த அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர். அதே நேரத்தில், ஆதார் எண் இல்லாதவர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மட்டுமே இந்த சேவைகளை பெற முடியும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here