இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு மெகா வெற்றி.., வயசானாலும் உங்க ஆட்டம் மட்டும் மாறல.., பின்னிட்டீங்க போங்க!!

0
இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு மெகா வெற்றி.., வயசானாலும் உங்க ஆட்டம் மட்டும் மாறல.., பின்னிட்டீங்க போங்க!!
இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு மெகா வெற்றி.., வயசானாலும் உங்க ஆட்டம் மட்டும் மாறல.., பின்னிட்டீங்க போங்க!!

இந்திய லெஜண்ட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய முன்னாள் வீரர்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்து வெற்றி பெற்றனர்.

INDL vs SAL!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் ஒரு பகுதியான லெஜண்ட்ஸ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய லெஜண்ட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய லெஜண்ட்ஸ் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் ரெய்னா (33), ஸ்டூவர்ட் பின்னி (42), யூசுப் பதான் (35) ஆகியோர் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்தனர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணி வீரர்களில் ஜாண்டி ரூட்ஸ் (38), புட்டிக் (23), வன் வ்யாக் (26) ஆகியோர் மட்டுமே அதிக ரன்கள் குவித்தனர். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தனர்.

இதன் மூலம் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணி வீரர்களை வீழ்த்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய லெஜண்ட்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அனைத்து இந்திய ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் என்னதான் வயசானாலும் உங்க ஆட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here