‘இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா தமிழ்நாட்டிற்கு பச்சை துரோகம் செய்துள்ளது’ – தலைவர்கள் ஆவேசம்!!

0

இலங்கையில் ஏற்பட்டு வரும் மனித உரிமை மீறலுக்கான தீர்மானத்தில் இந்தியா புறக்கணித்ததை அடுத்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவினை தெரிவிக்காதது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா தீர்மானம்

இலங்கையில் உள்நாட்டிற்கு எதிராக நடைபெற்ற போரின் போது தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வந்தது. இதனை அடுத்து அந்த நாட்டிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தினை கொண்டு வந்தது. இந்த தீர்மானம் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலமாக இலங்கைக்கு இது ஒரு சர்வதேச அழுத்தமாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது. இதனை அடுத்து இந்த தீர்மானத்தினை எடுக்க தொடர்ந்து அனைத்து நாடுகளிடத்திலும் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை – அதிமுக அமைப்பு செயலாளர் அதிரடி!!

இதில் பல நாடுகள் பங்கேற்றன. அதில் 11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. 22 நாடுகள் எதிர்ப்பு குரல் தெரிவித்திருந்தது. ஆனால், இந்தியா இதனை புறக்கணித்தது. இந்தியா சார்பில் இவ்வாறாக நடந்து கொண்டது அனைவரையும் வருத்தம் மற்றும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இப்படியாக இருக்க அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

India's government loses key ally over U.N. resolution against Sri Lanka - The Washington Post

அரசியல் பிரமுகர்களான எச்.ராஜா “இந்தியா இவ்வாறாக புறக்கணித்திருப்பது தமிழக மக்களுக்கு இழைத்த அநீதியாக பார்க்கப்படுகிறது. இந்தியா ஆதரவு தெரிவித்திருந்த வேண்டும். மோடி அரசின் உண்மையான முகம் தற்போது தெரிந்து விட்டது” இவ்வாறாக தெரிவித்துள்ளார். அதே போல் மதிமுக கட்சி செயலாளர் வைகோ “இந்தியா இவ்வாறாக செய்திருப்பது பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு செய்த துரோகத்துக்கு என்னுடைய பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார். அதே போல் அரசியல் தலைவர் பா.சிதம்பரம் கூறியதாவது, “இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தது தமிழர்களுக்கு செய்த பச்ச துரோகம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here